தர்மபுரி: சாலையில் மயங்கி விழுந்த கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அடுத்த காளப்பனஅள்ளி சேர்ந்த குமரன் இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகின்றார் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பும் போது பெரியாம்பட்டி சமத்துவபுரம் அருகே சாலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார் இதனை அடுத்து அருகிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் பரிசோதனை செய்த மறுத்தவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி