தருமபுரி தொகுதிக்குட்பட்ட மதிகோண்பாளையம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விரைவாகவும், சரியாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.