தர்மபுரி: புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

தர்மபுரியில் இடப்பற்றாக்குறை காரணமாக சோகத்தூர் பகுதியில் 10 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இரவு பகலாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் தர்மபுரிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் இந்த பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, இன்று சனிக்கிழமை தர்மபுரி ஆட்சியர் சதீஷ் நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி