தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திங்கள் தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் நேற்று தேங்காய் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் கொண்டு வந்த 2.50 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. தேங்காயின் அளவுக்கேற்ப ஒரு தேங்காய் ரூ. 9 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. வியாபாரிகளின் தகவல்படி, நேற்று ஒரே நாளில் ரூ. 21 லட்சம் மதிப்பிலான தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.