பாப்பிரெட்டிப்பட்டி, முள்ளிகாடு பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய் (15), பொதுத்தேர்வில் 460 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 4ஆம் இடம் பிடித்தார். இருப்பினும், பள்ளியில் முதலிடம் பெற முடியவில்லை என்ற விரக்தியில், நேற்று புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.