தர்மபுரி: காரிமங்கலத்தில் 1. 80 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தையில் ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் என ஒட்டுமொத்தமாக சுமார் 1.80 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் ரூ.6000 - ரூ.25,000 வரையிலும், மாடுகள் ரூ.8,000 - ரூ.45,000 வரையிலும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - ரூ.1400 வரையிலும் விற்பனையானதாகக் கூறப்பட்டது.

தொடர்புடைய செய்தி