கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரவு வீட்டில் பாத்திரம் விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு பார்த்தபோது வீட்டிலிருந்து ஒருவர் தப்பி விடுவதை கண்ட முத்துக்குமார் மிரட்டிச் சென்றபோது அவரை பிடிக்க முடியவில்லை. மேலும் வீட்டில் இருந்து இரண்டு பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து மறுநாள் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அளித்த புகாரின் பேரில் பொம்மிடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதி சேர்ந்த 17 வயது சிறுவன் வீட்டிலிருந்து நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று பிப்ரவரி 17 மாலை காவலர்கள் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.