அந்த வகையில் ஏப்ரல் 13 நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை நேற்று ஆரம்ப வழியாக 8,000 ரூபாய் முதல் 16,000 ரூபாய் வரையில் விற்பனையானது.
மேலும் கடந்த வாரத்தை காட்டிலும் ஒரு மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் விலை குறைந்து காணப்பட்டது. 25 மூட்டைகளுக்கு மேலாக நேற்று விற்பனையான நிலையில் ஒரே நாளில் 4 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.