இதனை தொடர்ந்து இன்று எர்ரப்பட்டி பெருமாள் கோயில் வளாகத்தில், எ. ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர் கவுரம்மாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, எ. ஜெட்டிஅள்ளி கிராம ஊராட்சியை, தர்மபுரி நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கிராம சபை கூட்டம் கூட்டியிருந்தனர். இந்த கூட்டத்தில், அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இன்று(ஜன.4) நடந்த கிராம சபை கூட்டத்தில் ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சியை, தர்மபுரி நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றி, வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.