இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 20 விவசாயிகள் 80 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6,510 முதல் ரூ.7,200 வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகளிர் டி20 உலகக்கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்