தர்மபுரி: 33 குவிண்டால் மஞ்சள், 39 லட்சத்திற்கு ஏலம்

தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மார்ச் 18, மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 விவசாயிகள் 63 மூட்டைகளில் 33 குவிண்டால் மஞ்சள் கொண்டு வந்தனர். 

இதில் பனங்காலி மஞ்சள் ஒரு குவிண்டால் 23,509 ரூபாய்க்கும், விராலி மஞ்சள் குவிண்டால் 13,169 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் 11,189 ரூபாய்க்கும் என நேற்று 39,90,098 ரூபாய்க்கு விற்பனையானது. மஞ்சளை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். மேலும் இந்த மஞ்சள் ஏல விற்பனை, ஒழுங்குமுறை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் மற்றும் வேளாண் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி