தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை, கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மூன்று கார்கள் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். மேலும், சுற்றுலா வேன் கண்டெய்னர் லாரியின் மீது மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.