ழக்கம் போல் நேற்று அக்டோபர் 01 காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கால் பவுன் எடையுள்ள 4 தங்க தாலி, பக்தர்கள் காணிக்கையாக அளித்த 1 அடி அளவுடைய 27 வெள்ளி வேல்கள், கோயில் சீட்டு பணம் 15 ஆயிரம் மற்றும், உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பக்தர்கள் காணிக்கை பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து பூசாரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று அக்டோபர். ,1 புகார் அளித்தன் பேரில் விரைந்து வந்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி வேல்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.