பாலக்கோடு: கடமடை ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமடை ஏரி பரப்பளவில் பெரிய ஏரியாகும். இந்த ஏரி பாசனத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நாளில் பல நாட்களாக ஏரியை தூர்வாரவில்லை என்பதால் மண் கசிவுகள் மற்றும் முட்புதர்கள் அதிகரித்து, ஏரியில் போதுமான அளவு மழைநீர் சேமிக்க முடியவில்லை என தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில், ஆதி பவுண்டேஷன் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, ஜெயம் சமுதாய வளமையம், தர்ம அறக்கட்டளை, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளைகள் என பலரும் இணைந்து ஏரிகளை தூர்வாரும் பணியை இன்று துவங்கினர். இதில் ஆதி பவுண்டேஷன் நிறுவனர் ஆதிமூலம், சமுதாய சேவகர் சுகுமாரன் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோர் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி