மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் காவலர்கள் இன்று(அக்.03) ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஆணையும், பெண்ணையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், மாரண்டஅள்ளி மாரப்பன் தெரு பகுதியை சேர்ந்த சக்திவேல், அவருடைய மனைவி சரண்யா என்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேலை காவலர்கள் கைது செய்தனர். அவருடைய மனைவி சரண்யா தப்பி ஓடிய நிலையில் அவரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி