தர்மபுரி: கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் சக்தி வேல் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பரத் (20) மற்றும் லெனின் (20) என்ற இரு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி