தர்மபுரி: இருசக்கர வாகன விபத்து.. வாலிபர் உயிரிழப்பு

பஞ்சப்பள்ளி, சின்னாறு அணையைச் சேர்ந்த பார்த்தீபன், வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது, தின்னூர் அருகே வளைவில் நிலை தடுமாறி மைல்கல் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மே 20 காலை அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், பஞ்சப்பள்ளி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி