தர்மபுரி மாவட்டம் தண்டுக்காரன் அள்ளியைச் சேர்ந்த சிலம்பரசன், முகமதுசையத் மற்றும் ரூபன்குமார் ஆகியோர் திங்கட்கிழமை பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட கொலசனஅள்ளி - வெள்ளிச்சந்தை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். மகேந்திரமங்கலம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.