தர்மபுரி: பெரியாம்பட்டியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி மயான பகுதியில் பொது இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, காரிமங்கலம் காவல்துறையினர் திங்கட்கிழமை மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நாகராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா புகைத்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நாகராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி