தர்மபுரி: விவசாயியை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள திருமால்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் விவசாயி. தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் இவரது நண்பர்களான மதன், கக்கன் சூர்யா, கடமடை கிராமத்தைச் சேர்ந்த சூர்யா ஆகிய 5 பேரும் நேற்று (ஜூன் 6) இருசக்கர வாகனத்தில் திருமல்வாடி கம்மாளப்பட்டி சாலையில் மது அருந்திவிட்டு நின்று கொண்டு இருந்தனர். 

அப்போது ராஜசேகருக்கும், ஆனந்தனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் பீர்பாட்டிலால் ராஜசேகர் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிந்து ஆனந்தனை கைது செய்தனர். மேலும் மதன், சூர்யா, மற்றொரு சூர்யா ஆகிய 3 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி