பின்னர் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் வசிக்கும் பாஞ்சாலி அவர் கூறியதாவது: எனது கணவர் முருகேசன் மேஸ்திரி எனக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கூத்தப்பாடி சேர்ந்த தமிழ்மணி என்பவரிடம் மாதாந்திர சீட்டு பணம் கட்டி வந்தேன். சீட்டு முடிந்து 2 வருடங்கள் ஆகியும் எனக்கு வழங்க வேண்டிய 94,000 ரூபாய் பணத்தை இன்றுவரை தரவில்லை. தொடர்ந்து தமிழ்மணியிடம் பணத்தை வழங்குமாறு எனது கணவர் முருகேசன் கேட்டுள்ளார். ஆனாலும் அவர் பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து தமிழ்மணி மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். புகார் மீது போலீசாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் புகார் கொடுத்தது தமிழ்மணிக்கு தெரியவந்து எனது முருகேசனை கத்தியால் வெட்டியும், கல்லைக் கொண்டு முதுகில் அடித்து எலும்பை உடைத்து துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்மணி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வழங்க வேண்டிய தொகையை வாங்கித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.