பஞ்சுபள்ளியை அடுத்த சூடனூர் கிராமத்தில் விவசாயி மாதப்பன் கிணற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பெண் பிணம் மிதந்தது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அது 86 வயது பச்சியம்மாள் என்பதும், கிணற்றில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பஞ்சப்பள்ளி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.