தர்மபுரி: வீட்டில் மது விற்பனை செய்த பெண் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவாபட்டி கிராமத்தில் மீனா (57) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய பாலக்கோடு காவல் நிலைய காவலர்கள், மீனாவின் வீட்டில் இருந்து சுமார் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, திங்கட்கிழமை மாலை அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி