இந்த நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் இந்துமதி, திமுக ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட மேலூர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன், குமரன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, அவை தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு ஆட்சியில் உள்ள எட்டாவது வார்டில் உள்ள கண்ணன் பள்ளி தெருவில் மந்தை வீதி வரையில் உள்ள 2வது வார்டில் உள்ள முதல் மந்தைவெளி வரையிலும் தார் சாலை அமைக்கும் பணிகள் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 70 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பிகே. முரளி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.