பாலக்கோடு அருகே நம்மாண்டஅள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வழங்கப்படாததால், அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று சனிக்கிழமை மாலை குடிநீர் கேட்டு பஞ்சப்பள்ளி - ராயக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ் சுந்தர் தலைமையில் காவலர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.