தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தாபா சிவன் முன்னிலையில் நேற்று (மே 23) தவெகவில் இணைந்தனர். குறிப்பாக, தேமுதிக கட்சியைச் சேர்ந்த நகர செயலாளர் சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.