தர்மபுரி: சிறுமிக்கு சூடு வைத்த வழக்கு இருவர் கைது

தர்மபுரியில், கணவரைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் வசித்து வந்த எழிலரசி, தனது 3 வயது குழந்தையை கள்ளக்காதலன் ஐயப்பன் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை, உடல்நலம் குன்றிய குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமிக்கு ஊரு விளைவித்ததன் அடிப்படையில் காவலர்கள் ஐயப்பன் மற்றும் சிறுமியின் தாய் எழிலரசி ஆகிய இருவரையும் இன்று சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி