தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரப் பகுதியில் தினசரி 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை விரைந்து சரிசெய்ய சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இன்று புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.