தர்மபுரி: அதிமுகவினருக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் மாவட்டத்திற்குள் செல்லும் பேருந்துகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பழைய பேருந்து நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இதை வியாபார சங்கங்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றி வேல், நகர செயலாளர் ரவி மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி