இரவு பம்பை வாதியம் முழங்க வானவேடிக்கையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சியும் சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து ஆதிசேஷ வாகனத்தில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சியும் பின்னர் கரகத்துடன் ஊர்வலமாக வந்து தயாராக இருந்த தீக்குண்டத்திற்கு ஆடு பலியிட்டு பூஜை செய்த பின்னர் அருள்வாக்கு கூறி பூசாரி சக்தி கரகத்துடன் தீக்குண்டத்தில் இறங்கினார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பொதுமக்கள் தீக்குண்டத்தில் உப்பு மிளகாய் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் கோயிலின் முன்பு நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பெரியவர் முதல் சிறியவர் வரை தரையில் படுத்துக்கொண்டனர். அவர்கள் மீது கரகம் எடுத்துவந்த பூசாரி அவர்கள் மீது ஏறி ஏறிச்சென்றனர். பின்னர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் ஆராதனையும் நடைபெற்றது.