தர்மபுரி: தர்மபுரியில் 102 டிகிரி தாண்டியது வெப்பநிலை

தர்மபுரி மாவட்டத்தில் சமீப நாட்களாக காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் பனிமூட்டமும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. 10 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கும் நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

நேற்று மார்ச் 29 தர்மபுரியில் வெயில் தாக்கம் காலை முதல் அதிகரித்தது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று நிலவரப்படி தர்மபுரியில் கோடை வெயில் 102.2 டிகிரி செல்சியசை தாண்டியது. இதனால் பகல் நேரங்களில் வெப்ப அனல் காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி