தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அருகே செந்தில் நகர் பகுதியில் புத்துநாகர் கோயில் அமைந்துள்ளது. இன்று (ஆக 01) ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பால் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பால் மஞ்சள் குங்குமம் முட்டை ஆகியவற்றை படைத்து வழிபாடுகள் செய்தனர். இன்று பூஜை செய்வதால் நல்லவரன் கூடும் மற்றும் கணவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம் என்பதால் காலையிலே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது