தர்மபுரி: காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் ஸ்ரீ தட்சணகாசி காசி காலபைரவர் 1200 வருடம் பழமை வாய்ந்த திருக்கோயில் அதியமான்கோட்டை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை, அஸ்தவ பூஜை காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல், பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும், சுவாமிக்கு ராஜ அலங்காரம், சிறப்பு தரிசனம் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு 1008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், மகா குருதி பூஜை இரவு 2.30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல், அதிகாலை 3 மணி அளவில் 108 லிட்டர் பால் கலச அபிஷேகம், எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி