தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலம் அமைந்துள்ளதுஅமைந்துள்ளது. இங்கு தினசரி திருப்பலி வழிபாடுகள் நடைபெற்று வருவது வழக்கம்வழக்கம். தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு விரதக்காலத்தை அனுசரித்து வரும் சூழலில்சூழலில், நேற்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் அதனைத் தொடர்ந்து பாடல் திருப்பலி நடைபெற்றதுநடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.