தர்மபுரி: கிணற்றில் உயிருக்கு போராடிய பாம்பு மீட்பு

பாலக்கோடு அடுத்த சின்ன பேகாரா அள்ளி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில், வெள்ளிக்கிழமை காலை 5 அடி நீள நாகப்பாம்பு உயிருக்கு போராடியது. உடனடியாக பாலக்கோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர், பின்னர் அதை பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த நாகப்பாம்பை பிக்கிலி காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி