பின்னர் சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இரண்டு அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பு இருசக்கர வாகனத்தின் எஞ்சின் பகுதிக்குள் நுழைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பை லாபகமாக பிடித்தனர். மேலும் அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் சென்று விடுவித்தனர். இருசக்கர வாகனத்தில் பாம்பு நுழைந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்