தர்மபுரி: மழையால் பூக்கள் வரத்து அதிகரிப்பு.. விலை சரிவு

தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், அரூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து மலர் சாகுபடி ஈடுபட்டுள்ள விவசாயிகள் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாக பொழியும் மழையின் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்து விலை சரிந்துள்ளது. 

இன்றைய பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் (விலை கிலோவில்) குண்டு மல்லி ரூ. 285, சன்ன மல்லி ரூ. 480, கனகாம்பரம் ரூ. 500, ஜாதி மல்லி ரூ. 300, காக்கட்டான் ரூ. 250, கலர் காக்கட்டான் ரூ. 200, நாட்டு சம்மந்தி ரூ. 80, ஹைப்ரேட் சம்மந்தி ரூ. 130, சம்பங்கி ரூ. 70, அரளிப்பூ பன்னீர் ரோஸ் ரூ. 130, செவ்வரளி ரூ. 180, நந்தி பட்டன் ரோஸ் ரூ. 120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி