தர்மபுரி: வீணாகும் குடிநீர் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப்லைன் உடைந்ததால், பல மாதங்களாக ஏரிக்கு தண்ணீர் சென்றுள்ளது. பைப்லைனை சீரமைக்கும் பணியின் காரணமாக, இன்று காலை 11 மணி முதல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தண்ணீரை சனக்குமார் நதியில் காற்றடைப்பான் மூலம் திறந்து விட்டுள்ளனர். இதனால், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சுமார் 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்து அருவி போல் பெருக்கெடுத்து வீணாகி வருகிறது. உடைந்த பைப்லைனை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி