பாலக்கோடு அடுத்துள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்ல பழமையான பேருந்து நிழற்கூடத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிழற்கூடம் மிகவும் பலவீனமடைந்து, மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, விபத்துகள் நிகழும் முன் மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து நிழற்கூடத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.