தருமபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பாஜக இளைஞர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட தலைவர் அனிபாமுகம்மது தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக எம். எல். ஏ எஸ். பி. வெங்கடேஸ்வரன், அதிமுக எம். எல். ஏ கோவிந்தசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்று திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.