தர்மபுரி: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதால் கடையை அகற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் உடனடியாக கடையை மூட வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி