அனைத்து கடன்களையும் கட்டினால் மட்டுமே NOC தருவோம் என கூறி அலைக்கழித்து வருகின்றனர். மேலும் முறையாக கடன் தவணை செலுத்தி வந்தாலும் ஒரு நாள் தாமதம் ஆனாலும் வாகனங்களை பறிமுதல் செய்யும் அடாவடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முருகேசன் என்பவரின் லாரிக்கு கடன் தொகை பெற்றிருந்தார். இரண்டு நாட்கள் தவணை கட்ட தவறியதை அடுத்து ஆந்திராவில் சென்றிருந்த லாரியை குண்டர்கள் உதவியுடன் சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள பொருட்களுடன் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று சோழமண்டல நிதி நிறுவனத்தில் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.