தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பெரியம்பட்டி கிராமம் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பேருந்துகள் பெரியம்பட்டி கிராமத்திற்குள் வராமல் பைபாஸ் சாலையில் செல்வதால் பொதுமக்கள் தொடர்ந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று (ஜூலை 31) இரவு 8 மணியளவில் ஊருக்குள் வராத 2 தனியார் பேருந்துகளை பொதுமக்கள் சிறைபிடித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, 7 தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.