தர்மபுரி: பால்வண்ண நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மணியக்காரன் கொட்டாயில் உள்ள பழமை வாய்ந்த பால்வண்ண நாதர் திருத்தலத்தில் நேற்று சனிக்கிழமை மகா பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாலை 6 மணி அளவில் சுவாமிக்கு பால், தயிர், தேன், வில்வ இலை உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி