தர்மபுரி: குட்கா கடத்திய கார் பறிமுதல்; காவலர்கள் விசாரணை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காரிமங்கலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காரிமங்கலம் காவல் நிலைய காவலர்கள் பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மார்ச் 21) விடியற்காலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது சேலம் நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காவலர்கள் காரை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்டது தெரியவந்தது. 

இதை அடுத்து 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் காரின் உரிமையாளர் யார் மற்றும் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் யார் என்பது குறித்தும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி