தர்மபுரி: புது மணப்பெண் மாயம்.. காவலர்கள் விசாரணை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நீர்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரோஷினி. இவருக்கும், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் கடந்த 12-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பின்னர் நேற்று புதுமணதம்பதி ராஜா வீட்டுக்கு வந்தனர். இரவு புதுப்பெண் வீட்டிலிருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக புதுப்பெண்ணின் தந்தை ராஜா பென்னாகரம் காவல் நிலையத்தில் இன்று புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி