தருமபுரி, பாலக்கோடு அருகே சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 01ம் தேதி தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இது தொடர்பாக பாலக்கோடு காவலர்கள் பரத்குமார்(19), யோகக்குமார்(20), பார்த்தசாரதி(20), ரமேஷ்(20) மற்றும் 18 வயது சிறுவன் என 5 பேரை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய கார்கள், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.