தர்மபுரி: ஒகேனக்கல்லில் பென்னாகரம் எம்எல்ஏ கள ஆய்வு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மாலை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நேரில் சென்று தொங்கும் பாலம், பரிசல் துறை மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களை ஆய்வு செய்தார். சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடி, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி