தர்மபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியபோட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை, தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஓவியப்போட்டி மற்றும் வண்ண திறன் கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 134 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, மேலும் முதல் இடம் பிடித்தவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி