தர்மபுரி: தொழிற்சங்கங்களின் சார்பில் திறந்தவெளி ஆயத்த மாநாடு

தருமபுரியில் சிஐடியு, ஏஐசிடியு, எல்பிஎஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறவும், வேலை நாட்கள் மற்றும் தினக்கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி, திறந்தவெளி ஆயத்த மாநாடு இன்று வெள்ளிக்கிழமை தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், நாகராஜ், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி